>

புதன், 19 ஜனவரி, 2011

காவலன்-ஒரு கண்ணோட்டம்

பல சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக,திடீரென்று (முன்பே அறிவித்திருந்தாலும்  கூட) பொங்கலன்று திரைக்கு வந்தது காவலன்.விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு படங்களுக்கு டிக்கெட் கிடைக்கடாத காரணத்தினால் காவலன் படம் பார்க்க நேரிட்டது .கண்டிப்பாக தேறாது என்று எதிர்பார்த்த படம் எதிர்பாரா  விதமாக ஓரளவுக்கு பரவாயில்லை என்றே நினைக்க வைத்தது .அலட்டல் இல்லாத (மற்ற விஜய் படம் போல) அறிமுக காட்சியில் வரும் விஜய்யை பார்த்த பின்பு லேசாக மனதில் ஓர் ஆர்வம் (ஆதங்கம் ) பிறக்கிறது.படம் சாதரணமாக ஆரம்பித்து முற்றிலும் ஒரு காதல்களமாக  மாறுகிறது .விஜயின் நடிப்பில் ஒரு கட்சியில் கூட மிகை இல்லாதது (ஓவர் அக்டிங் பா) அவரின் கண்மூடித்தனமான ரசிகர்களையும் திருப்தி அடைய வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .சண்டைக் காட்சிகளில் வழக்கம் போல் பறந்து பறந்து அடித்தாலும் வேறு வழியின்றி பார்த்துதான் ஆகவேண்டும்.பாடல்கள் கேட்கும்படி இல்லாவிட்டாலும் பார்க்கும்படி இருக்கிறது.வடிவேலுவின் நகைச்சுவையில் முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் சிரிக்கலாம்.ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் தேவையில்லை என்றாலும் வடிவேலுவின் அறிமுக காட்சியிலும் அவர் அசினின் வீட்டுக்குள் நுழையும் காட்சியிலும் கொஞ்சம் விளக்கியிருக்க வேண்டும்.அசினின் நடிப்பு ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது (அடிக்கடி க்ளோசப்பில் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்).வழக்கம் போலவே  அசினின் தோழி அழகு.வேட்டிய மடிச்சு கட்டு(தொடை தெரியாமல்) ராஜ்கிரண் அவருக்கான பத்திரம் என்பதால் நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் தூள் கிளப்புகிறார்.அசினின் அம்மாவாக ரோஜாவும்  அவ்வப்போது காட்சி தருகிறார்.திரைக்கதையின்
தொய்வில்லாத்தன்மை இயக்குனர் சித்திக்கை பிரதிபலிக்கிறது.உச்சகட்ட காட்சி பொறுமையாக படமாக்க பட்டிருக்கிறது அருமை. விஜய் இதுபோன்று 'கதைகளிலும்'நடிப்பிலும் கவனம் செலுத்தினால் மீண்டும் வலம் வரலாம்.மொத்தத்தில் படம் பரவாயில்லை என்கிற ராகம்.
நன்றி ......

1 கருத்து:

வலைப்பதிவு காப்பகம்