>

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

யுத்தம் செய்-


இப்பொழுதெல்லாம் திரைப்பட விமர்சனங்களில் 'எதார்த்தம்' என்கிற வார்த்தையை அடிக்கடி கேட்க முடிகிறது.குறிப்பாக கிராமப்புறம் மற்றும் மதுரையை சார்ந்த  கதைகளிலும்,அந்த வகையில் பார்த்தால் இந்த படத்திலும் 'எதார்த்தம்' நிறையவே இருக்கிறது.வழக்கம் போலவே மிஷ்கினின் பேசும் படத்திற்கு வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.திரைக்கதையால் ஆரம்பம் முதல் இறுதி வரை சரியான வேகத்தோடு செலுத்துகிறார் மிஷ்கின்.அவ்வப்போது பின்னணி இசையும் நம் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்கிறது.இதுவும் மிஷ்கினின் சிந்தனையாகத்தான் இருக்கவேண்டும்.இவர் படங்களில் எல்லோரும் ஒன்றை கவனித்து இருக்கலாம்,அதாவது வயலின் மட்டுமே பிரதான இசைக்கருவியாக இருக்கும்.அந்த வயலின் கூட மிஷ்கினின் சிந்தனையை எதிரொலிக்கிறது.ஒவ்வொரு காட்சியிலும் நிறைய நுணுக்கங்களை கையாண்டிருக்கிறார்.
                     இந்த கதையின் நாயகர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு சேரனுக்கு கொடுக்கப்படுகிறது.சேரன்-சமுதாய பார்வையுள்ள நல்ல இயக்குனர்.அந்த கிரிடத்தை கழட்டி வைத்துவிட்டு மிஷ்கினுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்,கூடவே நம்முடையதையும்.மிதமான வெளிச்சமும் இசையுமே நிறைய காட்சிகளை புரியவைக்கிறது.இதுகூட ஒரு வகையில் மக்களின் திரைப்பட அறிவை வளர்க்க கூடியதாக இருக்கிறது என நினைக்கிறேன்.உடல் மொழியில் போலீஸ் அதிகாரிகள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று 'அஞ்சாதே'விலும்,எப்படி இருக்கிறார்கள் என்று இந்தப் படத்திலும் காட்டி இருக்கிறார்.இதுவரை சேரன்  திரைப்படங்களில் அழுதுதான் பார்த்திருக்கிறோம்,இந்தப்படத்தில் அழவில்லை,சிரிக்கவும் இல்லை.சண்டைக்காட்சி கூட நம்மை சிந்திக்க வைக்கிறது.அமீர் அண்ணன்(பிடிக்கும் என்பதால் அந்த உரிமை) ஒரு பாட்டுக்கு ஆடலுடன் பாடியும் இருக்கிறார்(இனியொருமுறை அந்த தவறை செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்).நீண்ட நாட்களுக்கு பின் செல்வாவை(ஆத்தா உன் கோயிலிலே)காண முடிகிறது அதுவும் வில்லனாக.மற்றபடி மாணிக்கவிநாயகம்,ஒய்.ஜி.மகேந்திரன்,அவர் மனைவி,மகன்,டாக்டர் அனைவரும் தத்தம் பாத்திரங்களை அழகாக வெளிப்படித்திருக்கிரர்கள்.படத்தின் கதையை ஓரளவுக்கு கூறினால் கூட படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடக்கூடும் என்பதால் 'க்ரைம் ஸ்டோரி'என்று மட்டும் கூறுகிறேன்.(அதான் தெரியுமே!!).மொத்தத்தில் 'எதார்த்தமாக' கூறினால் படம் எடுப்பதற்கும்,பார்ப்பதற்கும் செய்த செலவு திருப்தி அளிக்கிறது.நல்ல படங்களை பார்ப்பதும் அதைப்பற்றி எழுதுவதும் தவறில்லை என நினைக்கிறேன்.
நன்றி(மிஷ்கினுக்கும்)..

புதன், 19 ஜனவரி, 2011

காவலன்-ஒரு கண்ணோட்டம்

பல சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக,திடீரென்று (முன்பே அறிவித்திருந்தாலும்  கூட) பொங்கலன்று திரைக்கு வந்தது காவலன்.விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு படங்களுக்கு டிக்கெட் கிடைக்கடாத காரணத்தினால் காவலன் படம் பார்க்க நேரிட்டது .கண்டிப்பாக தேறாது என்று எதிர்பார்த்த படம் எதிர்பாரா  விதமாக ஓரளவுக்கு பரவாயில்லை என்றே நினைக்க வைத்தது .அலட்டல் இல்லாத (மற்ற விஜய் படம் போல) அறிமுக காட்சியில் வரும் விஜய்யை பார்த்த பின்பு லேசாக மனதில் ஓர் ஆர்வம் (ஆதங்கம் ) பிறக்கிறது.படம் சாதரணமாக ஆரம்பித்து முற்றிலும் ஒரு காதல்களமாக  மாறுகிறது .விஜயின் நடிப்பில் ஒரு கட்சியில் கூட மிகை இல்லாதது (ஓவர் அக்டிங் பா) அவரின் கண்மூடித்தனமான ரசிகர்களையும் திருப்தி அடைய வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .சண்டைக் காட்சிகளில் வழக்கம் போல் பறந்து பறந்து அடித்தாலும் வேறு வழியின்றி பார்த்துதான் ஆகவேண்டும்.பாடல்கள் கேட்கும்படி இல்லாவிட்டாலும் பார்க்கும்படி இருக்கிறது.வடிவேலுவின் நகைச்சுவையில் முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் சிரிக்கலாம்.ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் தேவையில்லை என்றாலும் வடிவேலுவின் அறிமுக காட்சியிலும் அவர் அசினின் வீட்டுக்குள் நுழையும் காட்சியிலும் கொஞ்சம் விளக்கியிருக்க வேண்டும்.அசினின் நடிப்பு ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது (அடிக்கடி க்ளோசப்பில் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்).வழக்கம் போலவே  அசினின் தோழி அழகு.வேட்டிய மடிச்சு கட்டு(தொடை தெரியாமல்) ராஜ்கிரண் அவருக்கான பத்திரம் என்பதால் நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் தூள் கிளப்புகிறார்.அசினின் அம்மாவாக ரோஜாவும்  அவ்வப்போது காட்சி தருகிறார்.திரைக்கதையின்
தொய்வில்லாத்தன்மை இயக்குனர் சித்திக்கை பிரதிபலிக்கிறது.உச்சகட்ட காட்சி பொறுமையாக படமாக்க பட்டிருக்கிறது அருமை. விஜய் இதுபோன்று 'கதைகளிலும்'நடிப்பிலும் கவனம் செலுத்தினால் மீண்டும் வலம் வரலாம்.மொத்தத்தில் படம் பரவாயில்லை என்கிற ராகம்.
நன்றி ......

திங்கள், 10 ஜனவரி, 2011

வலைப்பதிவு காப்பகம்